உண்மைகள் எப்போதுமே சற்று அமைதியானவை! ஊடக வெளிச்சத்தில் மின்னுபவை அல்ல!!!

Pulipparvaiஉண்மைகள் எப்போதுமே சற்று அமைதியானவை. ஊடக வெளிச்சத்தில் மின்னுபவை அல்ல. கூச்சல்களின் எல்லைகளுக்கு அப்பால் உண்மைகள் உறைந்து கிடக்கின்றன.

புலிப்பார்வை படத்தினை நாம் தமிழர் கட்சி எவ்விதத்தில் அணுகுகிறது என்பதற்கு மாபெரும் அத்தாட்சியாக படத்தின் இயக்குனரின் அறிக்கை காட்டுகிறது.

உண்மை இவ்வாறு இருக்க ..இவன் துரோகி, அவன் துரோகி ,காசு வாங்கிட்டான் என்றெல்லாம் தூற்றியவர்கள் முகத்தில் காறித்துப்பி விட்டு கடப்போம் உறவுகளே.

புலிப்பார்வை படத்தின் இயக்குனரிடம் அனைத்து திருத்தங்களை சொன்னவர் செந்தமிழன் சீமான். படத்தின் இயக்குனரும் அதை உணர்ந்து திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் பிறகும் படம் ஆட்சேபகரமானதாக இருந்தால்.. அப்படத்தினை நாம் தமிழர் தடுத்து நிறுத்தும்.

படத்தினை திருத்த,மாற்ற இப்படியும் போராடலாம்.

இப்படம் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய படமா… இல்லையேல் திருத்தி வெளியிட வேண்டிய படமா…என்பதை திருத்தங்களை படக்குழுவினர் மேற்கொண்ட விதத்திற்கு பிறகு முடிவு செய்வோம்.

அது வரை தலைவர் ஆக வேண்டியவர்கள், தலைவர் ஆனவர்கள், தலைவர் ஆக ஆசைப்படுபவர்கள் இதை வைத்துக் கொண்டு தாராளமாக அரசியல் செய்து கொண்டு இருக்கும் படி கோரப்படுகிறார்கள்..

புலிப்பார்வை படத்தின் இயக்குனர் பிரவீன்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழினத்தின் பெருமையை கூறும் விதத்தில் மிகப் பிரம்மாண்டமாக யுத்த பின்னணியில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையோடு ‘புலிப்பார்வை’ படம் வெளிவர தயாராக உள்ளது.

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனின் இரண்டாவது மகன் அநியாயமாக ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சேனல் 4 என்ற லண்டன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக சில புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டது. அதைக் கண்டு உலகநாடுகளே அதிர்ந்தது.

அந்த கொடிய சம்பவத்தை மையக் கருவாகவும், பாலச்சந்திரனையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘புலிப்பார்வை’. மாவீரனின் மகனை வீரனாக காட்டவும், பாலாவின் வீரத்தின் மூலம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகழை இந்த உலகம் போற்றவும்தான் இப்படத்தில் பாலாவிற்கு சீருடை வழங்கப்பட்டது.

‘சீராளன்’ என்ற படம் கண்டபின் என்னால் புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும் வீரத்தின் அடையாளமாக பார்க்கத் தூண்டியது. பிரபாகரன் கருத்துப்படி எடுக்கப்பட்ட அப்படம்தான் எனக்கு இன்ஸ்பிரேசன். ஆனால், பாலாவை சீருடையில் காட்டுவதன்மூலம் பாலாவை இளம் போராளியாக சித்தரித்ததாக படம் காணாத சிலருக்கு எண்ணம் எழுந்துள்ளது.

பாலா இப்படத்தில் குழந்தைகள், சிறுவர்கள் போரில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் அவரின் அறிமுகக் காட்சி. இதனை படம் கண்ட அனைவரும் அறிவர்.

சீமான் படம் கண்டபின் முதல் கமெண்ட்ஸ், சிறப்பு சிறப்பு… பாலாவின் சீருடை பற்றி முதன்முதலில் அவர் எனக்கு விளக்கம் தந்தார். இயக்குனராக பாலாவை நீங்கள் வீரனாக பார்த்தது சரி. ஆனால், பாலா ஒரு பள்ளி மாணவன் என கூறினார்.

சீமான் சீருடையில் சொன்ன கருத்தை நெடுமாறன் அவர்களும் சொன்னார்கள். இருவரின் கருத்துப்படி பாலாவின் சீருடையை மாற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் சீமான் கருத்துப்படியும். ஐயா நெடுமாறன் கூறிய கருத்துக்களின்படியும் சில வசனங்களை நீக்கிவிட்டோம். காட்சிகள் சிலவற்றையும் நீக்கிவிட்டோம்.

சீமான் எதையெல்லாம் மாற்றம் செய்தால் படம் சிறப்பாக வரும் என்று கருத்து சொன்னாரோ, அதைத்தான் மாணவர்கள் அமைப்பும் சொல்லி வருகிறது. மாணவர்கள் கருத்தும் மதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து தமிழ் அமைப்புகளும் கருத்துக்கும் தலைவணங்கி சீருடை மாற்றும் பணி நடந்து வருகிறது.

தமிழ் அமைப்புகள் கருத்துக்களையும், மாணவர்கள் கருத்தையும் அறிந்தே, இப்படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் தமிழர்களுக்காக எடுக்கப்படும் இப்படம் தமிழர்களின் மனமார்ந்த வரவேற்போடு வெளிவரவேண்டும். ஆதலால் சீருடைய எவ்வளவு செலவு செய்தாலும் மாற்றி விடுங்கள் என அனுமதி அளித்துள்ளார். அவரின் அறிவுரைப்படி இரவு, பகலாக பல தொழில்நுட்ப கலைஞர்களின் துணையோடு சீருடை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பாடல்கள், இசை என இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் இதில் அறிமுகமாகி உள்ளேன். பாடல்கள் யூடியூப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்

நன்றி,

-தமிழர் குரல்-

Tags: ,

Leave a Reply