பாஜகவில் இணைய ரஜினிக்கு அழைப்பு

rajini-modi34-600-jpgநடிகர் ரஜினிகாந்தை பாஜக-வில் இணைய வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை பாஜகவில் இணைத்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது அவரை முதல்வர் வேட்பாளராக அவரை அறிவிக்கும் திட்டமிருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் பற்றி பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “அது ஒரு செய்தியே, ஊடகங்களில் வந்த அதிகாரபூர்வமற்ற செய்தியாகும். கட்சியிலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ செய்தி அல்ல” என்றார். அவர் மேலும் கூறுகையில், “ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜகவின் நன்மதிப்பு பெற்றவர்.

நம் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரை நேரில் சந்தித்துள்ளார்” என்றார். ரஜினிகாந்த் விவகாரம் பற்றி அவர் மேலும் கூறியபோது, “நதிகள் இணைப்புத் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தபோது, ரஜினிகாந்த் ரூ.1 கோடி அளிப்பதாக உடனடியாக அறிவித்தார். அவர் தேசியப் பார்வை உள்ள ஒரு நடிகர். எனவே அவரை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்” என்று கூறினார்.

அதே போல் இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் கட்சியின் எதிர்காலத் திட்டங்களில் மிக முக்கியமானது என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.

Tags: ,

Leave a Reply