மடுவிற்கான பாப்ரசரின்விஜயம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் – எஸ் ஜே இமானுவேல் அடிகளார்
மடுதேவாலயத்திற்கான பரிசுத்தபாப்ரசரின் விஜயம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாகயிருக்கும், என உலக தமிழர் பேரவையின் தலைவர் எஸ் ஜே இமானுவேல் அடிகளார் வத்திக்கான் இன்சைடர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
அந்த இணையத்தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
ஜனவரிமாதம் 13முதல் 15ம் திகதி இடம்பெறவுள்ள தனது இலங்கை விஜயத்தின் போது பரிசுத்த பாப்ரசர் மடு தேவாலயத்திற்கு விஜயம் செய்வார்.
இதன் மூலம் பெருமளவு தமிழ் மக்கள் வாழும் மடுப்பகுதியில் காலடிவைக்கும் முதலாவது பரிசுத்த பாப்ரசராகிறார். இலங்கையில் இடம்பெற்ற சிங்களவர் தமிழர்களுக்கிடையிலான 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் மிகவும் உணர்வுபூர்வமான விடயத்திற்குள் நுழைவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.
பரிசுத்த பாப்ரசரின் விஜயம் சில போக்குவரத்து பிரச்சினைகளை உள்ளடக்கியது,மடு கொழும்பிலிருந்து 260 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது.எனினும் நல்லிணக்கத்தை மையப்படுத்திய இந்த விஜயத்தின் போது தமிழ் மக்களை புறக்கணிக்க முடியாது.
மடுதேவாலயத்திற்கான பரிசுத்தபாப்ரசரின் விஜயம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாகயிருக்கும் என உலக தமிழர் பேரவையின் தலைவர் எஸ் ஜே இமானுவேல் அடிகளார் தெரிவிக்கிறார்,
தமிழ் மக்கள் இன்னமும் இராணுவஆக்கிரமிப்பு ஆட்சியின் கீழேயே வாழ்கின்றனர். அவர்கள் இன்னமும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள்,ஒடுக்குமுறை போன்ற மனித உரிமை மீறல்களுக்கு உட்படுகின்றனர்.
இலங்கை கிறிஸ்தவ தேவாலாயங்கள் சிங்களவர், தமிழர் என்ற இரு சமூகத்;தையும் அரவணைக்கின்றன. இதன் காரணமாக ஐக்கியம் காணப்படுகின்ற போதிலும். யுத்த அனுபவங்கள் காரணமாக அந்த சமூகங்கள் பிளவுபட்டுள்ளன.
பரிசுத்த பாப்பரசரின் விஜயம் தேவாலயத்திற்கு திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
















