சோனி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய Sony Xperia Z3 டேப்லட்டின் புகைப்படங்கள் உட்பட அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இதன்படி இந்த டேப்லட் ஆனது Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் 8 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான HD IPS தொழில்நுட்பதில் அமைந்த தொடுதிரையினையும் உள்ளடக்கியுள்ளது.
இச்சாதனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
















