கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மத்திய கிழக்கு குறித்து மக்கள் வாசித்தது, பார்த்தது எல்லாவற்றிக்கும் பின்னால் இருந்தவர்கள் ஊடகத்துறையின் புதிய வரவுகள். அவர்கள் யாராலும் பணிக்கு அமர்த்தப்படவில்லை. முக்கிய ஊடகங்களின் அங்கீகாரமோ அல்லது நிதியுதவியோ, அடிப்படை பயிற்சியோ அவர்களுக்கு இருக்கவில்லை.
எனினும் துனிசியா முதல் சிரியா வரை சுயாதீன ஊடகவியலாளார்கள் வரலாற்றை ஒரு வித தீவிரதன்மையுடன் பதிவு செய்துள்ளனர். இந்த விசயத்தில் முக்கிய ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளாகளால் அவர்களை நெருங்க முடியவில்லை.
லிபியாவில் 2011 பிப்ரவரியில் கலவரம் வெடித்தபோது, பல சுயாதீன ஊடகவியலாளர்கள் அதனை நோக்கி ஈர்க்கப்பட்டனர். இவர்களில் சிலர் எகிப்து புரட்சியை ஏற்கனவே பதிவு செய்திருந்த அனுபவமுடையவர்கள். ஏனையவர்கள் கடாபியின் அரசின் வீழ்ச்சியை காண்பதற்காக ஊடகதுறைக்குள் ஈர்க்கப்பட்டவர்கள்.
கிழக்கு லிபியாவிற்கான மோதல் அஜ்டபியா நகரில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளை ஒரு கட்டத்தில் கிளர்ச்சிக்காரர்களை விட இவர்களது எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. லிபிய அரச படையினர் முன்னேறி வரும்போதெல்லாம் ஏனைய ஊடகவியலாளாகளுடன் சேர்ந்து இவர்கள் பதுகாப்பான இடங்களை நோக்கி பின்வாங்குவதை அந்தநாட்களில் காண முடிந்தது. அவர்களில் ஜேம்ஸ் பொலியுமிருந்தார். (james foley)
அமெரிக்காவின் ஸ்டார் அன்ட் ஸ்ரைப்ஸ் இராணுவ சஞ்சிகைக்கா முன்னர் நிருபரான பணியாற்றியிருந்த ஜேம்ஸ் ஒருவித நோக்கத்துடனும், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் ஆர்வத்திலும் அங்கு வந்திருந்தார். லிபியாவின் முன்னரங்குகளிலிருந்து கிடைக்க கூடிய படங்களை வாங்குவதற்கு பெருமளவானவர்கள் காத்திருந்தனர். மேலும் யுத்த செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும் குறைவிருக்கவில்லை.
லிபியாவிற்கு வந்து ஒரு சில மாதங்களில் ஜேம்ஸ் தனது முதலாவது ஆபத்தை எதிர்கொண்டார். வேறு இரு சுயாதீன ஊடகவியலாளாகளுடன் சேர்த்து இவர் கைதுசெய்யப்பட்டார். இவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்த தென்னாப்பிரிக்க புகைப்படப்பிடிப்பாளர் அன்டன் ஹம்மரேல் கொல்லப்பட்டார். அதே காலப்பகுதியில் நியுயார்க் டைம்ஸை சோந்த 4 ஊடகவியலாளர்களையும் லிபிய அரசுப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். 44 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீண்டும் தனது பணியை ஆரம்பித்தார்.
லிபியா நெருக்கடி தீவிரமடைய தொடங்கிய பின்னர் அங்கிருந்து வரும் செய்திகளையும் புகைப்படங்களையும் வாங்குவதற்கு பலர் தயாராகயிருந்தனர். ஊடக நிறுவனங்கள் அதனை பயன்படுத்தின. குறைந்த நிதியுடன் கூடியளவு சுயாதீன ஊடகவியலாளாகளை அவர்களால் பயன்படுத்த முடிந்தது. ஆனால் பல சுயாதீன ஊடகவியலாளர்கள் காப்புறுதிகளோ, செலவிற்காக பணமோ, ஊர் திரும்புவதற்கான விமான சீட்டுகளோ இல்லாத நிலையில் பணியாற்றினர்.
இவரை போன்ற பல சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு கூட்டாக பணிபுரிவதே பாதுகாப்பானதாக காணப்பட்டது. தான் தனது பணியில் சந்தித்த பல ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இவர்களில் சிலர் பின்னர் சிரியாவில் கைதுசெய்யப்பட்டு காணமற்போயினர்.திரிபோலியின் வீழ்ச்சி .கடாபியின் மரணம் போன்றவற்றிற்கு பின்னர் உலகம் அந்த நாட்டை மறக்க தொடங்கியிருந்த நிலையில் சிரியாவில் புதிய யுத்தமொன்று ஆரம்பமாகியிருந்தது.
உலகிலேயே செய்தி சேகரிப்பிற்கு ஆபத்தானதாக சிரியா யுத்தம் மாறியிருந்தது. வட ஆபிரிக்காவில் செய்திசேகரித்துக் கொண்டிருந்த பலர் அலெப்பே, இடிலிஸ், ஹோம்ஸ், ஹமா போன்ற சிரிய நகரங்களுக்கு வரத்தொடங்கினர்.
சிரியா யுத்தம் மிக முக்கியமானதாக காணப்பட்டாலும் செய்தி சேகரிக்கப்பட்ட விதத்தில் மாற்றங்கள் இருக்கவில்லை. ஊடக நிலையங்கள் மிகவும் பரபரப்பான செய்திகள் படங்களுக்காக எப்போதும் தயாராகயிருந்தன. மனு பிரபோவுடன் பொலியும் சிரியாவில் முன்னணியில் நின்றார். சிரியாவில் மிகவும் ஆபத்தான முன்னரங்குகளில் உயிர்தப்புவதற்கான தமது திறமையை பயன்படுத்தி அவர்கள் பணியாற்றினர். அவர்களுக்கு கிடைக்க கூடிய வெகுமதிகளை விட அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து பல மடங்காககாணப்பட்டது.
ஒரு தருணத்தில் வட சிரியாவின் சில பகுதிகளில் பணி புரிவதென்பது சாத்தியமற்றதாக.,ஆபத்தானதாக மாறியிருந்தது. ஊடகவியலாளாகள் கடத்தப்படுவதே அதற்கு காரணம், எல்லை பகுதிக்கு செய்திசேகரிக்கச் செல்லும் ஒவ்வொரு தடவையும் திரும்பி வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக காணப்பட்டன. நவம்பர் 2012 இல் அதிர்ஸ்டம் அவரை இறுதியாக கைவிட்டது, சிரியாவின் பினிஸ் நகருக்கு அருகே அவர் இன்னுமொரு புகைப்படப்பிடிப்பாளருடன் பிடிக்கப்பட்டார். தாங்கள் நன்கு அறிந்திருந்த மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
உள்ளுர் ஆயுதக்குழு தலைவன் ஒருவனாலேயே இவர் முதலில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் ஐ.எஸ்.ஐஎஸ்ஸஸிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இதற்கு பின்னர் சிரியாவில் மேலும் 11 ஊடகவியலாளாகள் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஊடக நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றவர்கள். ஆனால் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டேயிருந்தது. எனினும் எந்த ஊடகநிறுவனமும் அவர்களது காப்புறுதி போன்ற விசயங்களில் அக்கறை காட்டவில்லை.
சுயாதீன ஊடக செயற்பாடுகள் என்பது அதனை முன்னெடுக்கும் துணிச்சல் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ள அதேவேளை ஊடக நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை கைவிடும் வெட்கமற்ற நிலையையும் உருவாக்கியுள்ளது. ஊடக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எவ்வித பாதுகாப்புமின்றி பணிபுரியும் இவ்வாறான சுயாதீன ஊடகவியலாளாகளிடம் ஒப்படைக்கின்றன. ஆனால் அவர்களை அவர்களின் பாதுகாப்பு போன்ற விசயங்களில் கைவிட்டு விடுகின்றன.
இவ்வாறு கைவிடப்பட்டதற்கான விலையை அவர்கள் வடசிரியாவில் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். மத்திய கிழக்கில் மூண்ட வன்முறைகள் என்பது எமது காலத்தின் மிகமுக்கியமான செய்திகளிலொன்று, பெரும்பாலான ஊடகநிறுவனங்கள் ஒரு வித துஷ்பிரயோகத்தின் மூலமே அந்த செய்திகளை சேகரிக்கின்றன.
நன்றி,
-தமிழ் உலகம்-
















