அப்பரையும் சித்தப்பரையும் விஞ்சும் நாமல் ராஜபக்ச – லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிக்க முயற்சி
இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிப்பதற்கு நாமல் ராஜபக்ச மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது
நாமல் ராஜபக்சவும் இலங்கை பங்கு சந்தையில் பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அவரது நண்பரான நிமால் பெரேராவும் இணைந்து புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளனர். என்என் என இந்த நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தால் பாரிய மன அழுத்தத்திற்கும் அநீதிக்கும்உட்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொத்தலாவலயின் மீதான வழக்குகள் யாவும் கைவிடப்படும் ஆனால் அவரது சொத்துக்களை மீள பெற முயற்சித்தால் அவர் மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அச்சுறுத்தி,துன்புறுத்தி அவரது எஞ்சியிருக்கும் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
நிமால் பெரேராவின் மாபியா கும்பல் காரணமாக ஒரு முறை இலங்கை பங்கு சந்தை முற்றாக கவிழும் நிலை உருவானது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மோசடியில் ஈடுபட்டவர்களும் குற்றவாளிகளும் உயர் பதவி வகிக்கும் ஒரு சூழ்நிலையில் அவர் பான் ஏசியா வங்கியின் தலைவராக பதவி வகிக்கிறார்.
சமீபத்தில் சக்கர நாற்காலியில் தோன்றிய கொத்தாலவல கோல்டன் கிரற் காட் முதலீட்டாளர்கள் விடயத்திற்கு தீர்வு காண்பதற்கு தனக்கு அனுமதி வழங்குமாறு மன்றாடினார். ஒரு வங்கிக் கணக்கைக் கூட ஆரம்பிப்பதற்கு தனக்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார்.
நாமலும் நிமாலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி வர்த்தகப் பிரமுகர்களாக முயல்கின்றனர். மேலும் அவர்கள் புதிதாக உருவாகி வரும் இளம் வர்த்தகர்களை அழிக்கும் அவர்களுடைய சொத்துக்களை அபகரிக்கும் கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
















