இடுப்பு மாற்று சிகிச்சையில் தரமற்ற கருவி பொருத்தப்பட்டதால் பாதிப்பு – பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயார்.

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தரமற்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட 67 நோயாளிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தயார் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அமெரிக்காவை சேர்ந்த அந்த நிறுவனத்தின் கருவியில் குறைபாடு இருப்பது தெரியவந்ததை அடுத்து 2010 ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது.

அதனால், மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 67 நோயாளிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தயார் என்று அந்த நிறுவனம் அறிவித்தது.

அந்த தொகைக்கான காசோலை 2 வாரங்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதே போன்ற தொகையை மற்ற நோயாளிகளுக்கும் சரிபார்த்த பின் வழங்க தயார் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகையை பெறுவதால் நோயாளிகள் கூடுதல் இழப்பீடு கோருவதை தடுக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!