ரஜினியுடன் சிவாஜி, படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக விளங்கிய நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெலுங்கு படவுலகில் கூறப்படுகிறது.
ஸ்ரேயா சமீபத்தில் நடித்து வெளியான மனம் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்ததோடு ரசிகர்களையும் கவர்ந்தது. எனினும் ஸ்ரேயாவுக்கு அந்த படத்திற்கு பின்னர் வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த நடிகை ஸ்ரேயாவுக்கு தற்போது 31 வயது ஆகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் அவர் 61 திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து விலகி குடும்பவாழ்க்கையில் ஈடுபட இதுதான் சரியான சமயம் என ஸ்ரேயாவும் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்திற்குள் ஸ்ரேயாவின் திருமணம் முடிந்துவிடும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
















