கெளதம் மேனன் படத்துடன் நடிப்பில் இருந்து விலகலா? அஜீத்தின் அதிர்ச்சி முடிவு!

ajith-saliniகவுதம் மேனனின் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு ஒரு லாங் விடுமுறையை அறிவிக்க இருக்கின்றாராம் அஜீத். ஷாலினிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் முடிவெடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் முதுகு ஆபரேஷனையும் இந்த விடுமுறையில் முடித்துவிட அவர் முடிவு செய்துள்ளாதாகவும் கூறப்படுகிறது,.

எனவே அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை அவர் தனது நிலையை எடுத்து கூறி தவிர்த்து வருகின்றாராம். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தல 55 திரைப்படம் வரும் 2015ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த வருடம் முழுவதும் அஜீத் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த படம் 2016ஆம் ஆண்டில்தான் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கடும் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தல, . ‘உடம்பை ஃபிட்டா வெச்சுக்க பாக்ஸிங் நல்ல சாய்ஸ்!’ என்று தனது நண்பர்கள் வட்டாரத்திலும் கூறி வருகின்றாராம். அவர் தன்னை பார்க்க வரும் ரசிகர்களிடமும் ஜிம்முக்கு போய் நேரத்தை வேஸ்ட் செய்வதை விட பாக்ஸிங் கற்றுக்கொண்டால் உடம்புக்கும் நல்லது, ஒரு கலையை கற்றுக்கொண்டது போலவும் இருக்கும் என்கிறாராம் தல..பைக் ரேஸ், கார் ரேஸ் இவைகளை அடுத்து தல பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: , ,

Leave a Reply