ஹைவே, 2 ஸ்டேட்ஸ், போன்ற படங்கள் வெளியானபோது வட இந்திய இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை அலியா பட் ஒரே பேட்டியில் காமெடியாகி விட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.
இந்தியில் பெரும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட அலியா பட், கரண் கேட்ட கேள்விகளுக்கு சொதப்பலான, மற்றும் அதிர்ச்சியான பதில்களை கூறி தொலைக்காட்சி நேயர்களை மட்டுமின்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும் அதிர வைத்துவிட்டாராம். அவரிடம் இந்தியாவின் ஜனாதிபதி யார்? என்ற கேள்விக்கு “பிரித்வி ராஜ் சௌஹான்” என்ற பதில் டக்கென்று வந்துள்ளது. யார் இந்த பிரித்வி ராஜ் சௌஹான் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
அடுத்ததாக அவர் அந்த நிகழ்ச்சியில் தான் 10வது படிக்கும்போது ஒரு பையனுடன் டேட்டிங் சென்றதாகவும், அந்த பையன் தன்னிடம் ஏகப்பட்ட முத்தங்களை வாங்கிவிட்டு தன்னை கழட்டி விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் படுக்கையறைக்காட்சியில் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, “உலகம் முழுக்க பெட்ரூம்கள்ல என்ன நடக்குமோ, அதைத்தான் நாங்க செஞ்சோம். இதில் என்ன புது அனுபவம்? என்று கேள்வி கேட்டவருக்கே கேள்வி கேட்டு அதிர வைத்துள்ளார்.
இந்த பேட்டி வெளிவந்தபின்னர் அதுவரை கனவுக்கன்னியாக இருந்த அலியாபட்டை சமூக இணையதளங்களில் அதிகமாக கலாய்க்கப்படும் நபர் என்ற பெருமையை பெற்றுவிட்டார். சமூக இணையதளங்களில் எங்கு திரும்பினாலும் அலியாபட் கலாய்ப்புதான் கண்ணில் படுகிறதாம்.
தன்னை பற்றி அதிகமாக கலாய்க்கப்படுவது குறித்து கருத்து கூறிய அலியா பட், “‘என்னால நாலு பேர் சிரிக்கிறாங்கன்னா, அது அவங்க உடம்புக்கு நல்லதுதானே. சிரிச்சுட்டுப் போகட்டும்!’ என்று கூலாக பதிலளித்துள்ளார்.
















