மலேசிய கடற்கரையில் நிர்வாண விளையாட்டி போட்டி. 6 பேர் அதிரடி கைது. அதிர்ச்சி வீடியோ

malasiya-nackedமலேசியாவில் சட்டத்துக்கு புறம்பாக கடற்கரையில் நிர்வாண விளையாட்டு போட்டி நடத்திய நிர்வாகிகள் மற்றும் அதில் கலந்துகொண்டவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

மலேசியாவில் உள்ள பினாங்கு கடற்கரையில் “நிர்வாண விளையாட்டு போட்டி 2014’ என்ற பெயரில் தனியார் அமைப்பு ஒன்று போட்டி ஒன்றை நடத்தியது. இதில் பல ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக போட்டிகளில் கலந்துகொண்டனர். இரவு நேரத்தில் ரகசியமாக நடந்த விளையாட்டு போட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இதில் கலந்துகொண்ட ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இதனால் மலேசியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களையும், போட்டி அமைப்பாளர்களையும் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனால் அதிரடியாக விசாரணையில் இறங்கிய மலேசிய போலீஸார் மலேசியாவை சேர்ந்த 5 பேர்களையும், சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிங்கப்பூரை சேர்ந்தவர் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் $1000 அபராதமும் விதித்து நீதிபதி கூறினார். மற்ற ஐந்து பேர்களும் தங்கள் குற்றத்தை மறுத்ததால் அவர் மீதான வழக்கு நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியை ஏற்பாடு செய்த ஆறு நபர்களை தேடி வருவதாகவும், அவர்களையும் விரைவில் பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றும் மலேசிய போலீஸார் தெரிவித்தனர்.

Tags: ,

Leave a Reply