இலங்கையில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போய் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் உபத் தலைவர் கிறிஸ்ட்ரீன் பேர்லி இதனைத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான சர்சதேச கூட்டம் ஒன்று ஜெனீவாவில் நடைபெற்றிருந்தது.
இதில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.
இதில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் காணாமல் போனவர்களை மீட்பதற்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்திட்டங்களின் கீழ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















