ஜெயலலிதாவின் அழைப்புக்காக மூன்று தினங்களாக காத்திருக்கும் கூட்டமைப்பு!

sampanthan_sumanthiranதமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஜெயலிலதாவின் அழைப்புக்காக காத்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அவர்களுக்கு ஜெயலலிதாவுடனான சந்திப்புக்கான கால அவகாசத்தை கோரியுள்ள போதும், இன்னும் இந்த காலம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரையில் அங்கு தங்கி இருந்து இந்த முயற்சியை தொடரவிருப்பதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: ,

Leave a Reply