பிரான்சில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது!

france-attack-lycaபிரான்சு தலைநகர் பரிஸ் 10ல், தமிழர்களின் வியாபார மையமாக திகழும் லாச்சப்பல் பகுதியில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் இனந்தொியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் தோ்பவனிக்காக இன்றே அப்பகுதிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. இந்நிலையில் அப்பகுதி வர்த்தகர்கள் பிள்ளையார் பவனி வரும் பாதைகளை அலங்கரிக்கும் வேலைகளை ஆரம்பித்திருந்தவேளையில், லைக்கா மொபைல் நிறுவனமும் லாச்சப்பல் சந்தியில் பொிய கொட்டைகை ஒன்றை அமைத்து தமது விளம்பரங்களை செய்திருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது.

இனந்தொியாத நபர்கள் லைக்கா கொட்டகைக்குள் ஊடுருவித்தாக்கி அங்கிருந்த விளம்பரப்பலகைகள் மற்றும் கொட்டகைகளை பிரித்து எறிந்துள்ளனர். லைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லைக்காவின் பணியாளர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இனப்படுகொலையாளி மகிந்தவின் கூட்டாளியான லைக்கா நிறுவனத்துக்கெதிராக பல்வேறு எதிர்ப்புக்கள் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் லைக்காவுக்கெதிரான எதிர்பலைகள் ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply