இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பின் போது வடமாகண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனின் கடிதமொன்றை சம்பந்தன் மோடியிடம் கையளித்தார், விக்கினேஸ்வரனை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளாதாக மோடி தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
புதுடில்லியின் நன்கு அறியப்பட்ட 7 ரேஸ்கோர்ஸ் வீதி என்ற முகவரிக்கு முன்னால் பாதுகாப்பு படையினர் அந்த மூன்று வாகனத் தொடரணியை தடுத்து நிறுத்தினர். அவர்களை அந்த வாகனத்திலிருந்து இறங்கி வேறு மூன்று வாகனங்களில் பயணிக்குமாறு கோரினர் அந்தப் பணயம் இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசல்ஸதலத்தை நோக்கி அமைந்திருந்தது.
அங்கு இந்திய பிரதமர்நரேந்திர மோடி சம்பந்தனையும் அவரது 5 நாடாளுமன்ற சகாக்களையும் வரவேற்றார் தமிழில் வணக்கம் என்றார்.
சிறிது நேரத்தின் பின்னர் ஆரம்பமான பேச்சுக்களின் போது மோடி சம்பந்தனை பார்த்து நான் உங்களை முதலில் செவிமடுக்க விரும்புகிறேன் என்றார். மோடி இந்தியில் தெரிவித்தது மொழி பெயர்க்கப்பட்டது.
30 நிமிடங்களே நடைபெறவிருந்த அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் வரை நீடித்தது. அதன் முடிவில் மோடி நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
தனது இரு கரங்களையும் தனது நெஞ்சோடு அணைத்தபடி சம்பந்தன் சுட்டிக்காட்டும் விடயங்களை மோடி உன்னிப்பாக அவதானித்தார். இராணுவமயப்படுத்தல், சிங்கள குடியேற்றம், மற்றும் தமிழர் பகுதிகளில் சனத்தொகை பரம்பலை மாற்றுவது குறித்தே சம்பந்தன் மோடிக்கு தெளிவுபடுத்தினார். அவர் வேறு பல விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
வடபகுதியில் இராணுவத்தின் 15 அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, இது அளவுக்கதிகமானது, யாழ் மாவட்டத்தின் வலிகாமத்தில் இராணுவம் நிலங்களை சுவீகரிக்கிறது, இராணுவத்தினரின் குடும்பத்தினரை தங்கவைப்பதற்காக பொதுமக்களின் 1600 ஏக்கர் காணி எடுக்கப்பட்டுள்ளது. உரிமையாளாகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையிலும் சில வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுசென்றுள்ள போதிலும் அவர் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என்றார்.
திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்த சம்பந்தன் இராணுவத்தினருக்காக 10000 வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது, வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுPல் 5000 சிங்கள வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை, ஜனாதபதி அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக நியமித்தது, அவரால் வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் என்பவற்றையும் சம்பந்தன் மோடிக்கு தெளிவுபடுத்தினார்.
அரசமைப்பின் 13 திருத்தம் குறித்தும் சுட்டிக்காட்டிய சம்பந்தன் இலங்கை ஜனாதபதி கடந்த 5 வருடங்களில் அது தொடர்பாகவும் அதற்கு அப்பால் செல்வதாகவும் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தினார்.
பாராளுமன்ற தெரிவிக்குழுவில் இடம்பெறததற்கான காரணத்தையும் தெளிவுபடுத்திய அவர் கிழக்கு மாகாண நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தன் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து தான அறிந்துள்ளதாக தெரிவித்த மோடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு அரசமைப்பின்13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்கு அப்பால் செல்வதாகவும் உறுதியளித்ததாக குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள ஏனைய தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்ட மோடி இலங்கை அரசாங்கத்துடன் நேரடிபேச்சுக்களை ஆரம்பிக்குமாறும் கோரினார்.
இலங்க தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு விசேட பிரதிநிதி ஓருவரை நியமிக்குமாறு சம்பந்தன் விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

















