இரும்புக்குதிரை – திரைவிமர்சனம்

irumpu-kuthiraiபைக் பிரியரான அதர்வா, நண்பன் ஒருவனுடன் நடத்திய போட்டியில் வென்றதால் நண்பனின் பைக்கை கைப்பற்றுகிறான். தனது அண்ணன் உயிராக நினைத்த பைக்கை இழந்த அதர்வா நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான். தம்பியின் சாவுக்கு காரணமான அதர்வாவை பழிதீர்க்க அவனை தேடி புறப்படுகிறார் வில்லன் ஜானி.

இந்நிலையில் பைக்கை வென்ற மகிழ்சியில் தனது தந்தையை பைக்கில் அழைத்து செல்லும்போது எதிர்பாராத விபத்தால் தந்தையை பறிகொடுக்கும் அதர்வா, இந்த பைக்கால்தான் இவ்வளவு விபரீதம் என நினைத்து பைக்கை விற்றுவிடுகிறார். பின்னர் பீட்சா கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில் ப்ரியாஆனந்துடன் அதர்வாவுக்கு காதல் ஏற்படுகிறது. அதர்வாவை ஒரு பைக் வாங்கும்படி ப்ரியாஆனந்த் வற்புறுத்துகிறார். இருவரும் சேர்ந்து பைக்கை வாங்க முயற்சிக்கும் போதுதான் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிய பைக்கினை வாங்க ப்ரியாஆனந்த் கட்டாயப்படுத்துகிறார். வேறுவழியின்றி அதே பைக்கை வாங்கிக்கொண்டு ப்ரியாஆனந்தை அந்தபைக்கில் ஏற்றி செல்லும் போது வில்லன் ஜானி குறுக்கிட்டு இருவரையும் கடத்துகிறான். ஒருஇடத்தில் அதர்வாவை அடித்து போட்டுவிட்டு ப்ரியாஆனந்தை மட்டும் கடத்திக்கொண்டு செல்கிறான். காதலி ப்ரியாஆனந்தை அதர்வா எப்படி மீட்டார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இயக்குனர் யுவராஜ்போஸ் செய்த புத்திசாலித்தனமானகாரியம் ஒன்று படத்தை நிமிர்த்து விடுகிறது. அதுதான் கேரக்டருக்குரிய நடிகர்களை பொருத்தமாக தேர்வு செய்தது. பைக்ரேஸ் வீரராக அதர்வா, வில்லனாக ஜானி இருவரும் சரியான தேர்வு. மேலும் ப்ரியாஆனந்த், லட்சுமிராய், அலிஷாஅப்துல்லா என அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை சாமர்த்தியமாக அமைத்துள்ளார். ஆனாலும் பல இடங்களில் லாஜிக் இடிப்பது படத்திற்கு பெரியமைனஸ்.

பரதேசிக்கு பிறகு அதர்வாவின் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. ப்ரியாஆனந்த், லட்சுமிராய் இருவரும் கொடுத்த கதாபாத்திரத்தை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார்கள். சிறிதுநேரமே வந்தாலும் அலிஷாஅப்துல்லா மிகஅருமை. என்னமாய் பைக் ஓட்டுகிறார் இந்தபெண்மணி. ஏழாம்அறிவு படத்தில் அனைவரையும் மிரட்டிய வில்லன் ஜானி இந்த படத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மிரட்டுகிறது. பாடல்களில் இன்னும் கொஞ்சம்க வனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மிகப்பெரிய பிளஸ் கேமிரா. பைக் ஓடும் வேகத்தில் கேமராவும் சரிசமமாக ஓடியுள்ளது. கோபிஅமர்நாத்தை நன்றாக வேலை வாங்கியுள்ளார் இயக்குனர்.

லாஜிக் பல இடங்களில் ஓட்டையாக இருந்தாலும் இரும்புக்குதிரை நொண்டிக்குதிரை அல்ல..

Tags: ,

Leave a Reply