கிளி/ கற்பகா கணணி கற்கை நிலையத்தின் கிளை இன்று(30.08.2014) இராமநாதபுரம் , புதுக்காடு என்னும் இடத்தில் எமது கௌரவ பொருளாளர் ரவி அண்ணா அவர்களினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம், புதுக்காடு, தர்மபுரம் , பெரியகுளம், சம்புக்குளம், …பத்து ஏக்கர் ,கட்டைக்காடு ,மாயவனூர் , வட்டக்கச்சி ஆகிய இடங்களை சேர்ந்த சுமார் 60 மாணவ மாணவிகள் தற்போது தமது இலவச கணணி கற்கையை கற்பதற்கு விண்ணப்பித்து ஆரம்பித்துள்ளார்கள் , மேலும் இந்த இலவச கணணி நிலையத்தில் ஆங்கிலம் ,தையல் போன்ற வேறு பல வகுப்புகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் நிர்வாக பொறுப்பை புதுக்காடு வெற்றிபாதை சனசமூக நிலைய இளைய தலைமுறையினர் பொறுப்பேற்று திறம்பட செயல்படுத்துகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது , இவ்வாறு செயற்படுத்த விருப்பமுள்ள சனசமூக நிலைய உறுப்பினர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும் ( பூநகரி ,அகரையான் பகுதிகளில் உடனடியாக இத்திட்டத்தை அமுல்படுத்த உள்ளோம்.( please contact – 00447578989826 or e-mail- kilipeople2011@gmail.com)
















