மகிந்த தம்பதியினருக்கு மேல் நாட்டு மருமகள்… யோஷித ராஜபக்சவுக்கு திருமண ஏற்பாடு.

josithaஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு கண்டி மேல் நாட்டு சிங்கள பெண்ணை மணம் முடித்து வைக்க மகிந்தவும் அவரது மனைவியான ஷிரந்தி ராஜபக்சவும் தீர்மானித்துள்ளனர். கீழ் நாட்டு சிங்களவர்களான மெதமுலன ராஜபக்ச பரம்பரையினருக்கு மேல் நாட்டு சிங்களவர்களுடன் எந்த உறவு முறை தொடர்புகளும் இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் யோஷித ராஜபக்சவுக்கு மேல் நாட்டு சிங்கள பெண்ணை மணமுடிக்க ஜனாதிபதியின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் பேத்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் லொஹான் ரத்வத்த மற்றும் அமந்தா டயஸ் ரத்வத்த ஆகியோரின் புதல்வியான லோஹான்னா ரத்வத்த என்பவரை யோஷிதவுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளனர். ரத்வத்த பரம்பரையினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உறவினர்களாவர்.

அனுருத்த ரத்வத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரர் என்பதுடன் சந்திரிக்காவுக்கு அவர் மாமா முறையானவர். மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச, ரத்வத்த குடும்பத்தில் மணமுடிப்பதன் மூலம் ராஜபக்சவினர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் உறவினர்களாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply