ஜப்பானிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மத்திய அரசின் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசில் மோடிக்கு அடுத்த இடம் ராஜ்நாத்சிங்குக்குத்தான் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியிடம் நிதி, பாதுகாப்பு, கம்பெனிகள் விவகாரம் என முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டதால் அவர்தான் மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகத்தை ராஜ்நாத்சிங் வசமே ஒப்படைத்துள்ளதால் மோடி அரசில் 2ம் இடம் ராஜ்நாத்சிங்குக்குத்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
















