ஏ.டி.எம். செண்டர் கதவில் சிக்கி உயிருக்கு போராடிய போதை மனிதன். சீனாவில் பரபரப்பு.

atmபோதையில் இருந்த சீன இளைஞர் ஒருவர் ஏடிஎம் சென்டர் கதவை திறக்க முடியாத காரணத்தால் கதவின் கீழுள்ள ஒரு சிறிய இடைவெளி வழியாக வெளியே வர முயற்சித்த போது அதில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். தகவல் தெரிந்து விரைந்து வந்து மீட்புப்படையினர் அவரை காப்பாற்றினர்.

சீனாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த Zhejiang என்ற நகரில் 20 வயது இளைஞர் ஒருவர் பயங்கர போதையில் ஏ.டி.எம் சென்டருக்கு சென்று பணம் எடுக்க சென்றார். முதலில் தனது ஏடிஎம் கார்டை கதவில் ஸ்வைப் செய்து உள்ளே சென்ற அவர் பணம் எடுப்பதற்காக கார்டை மிஷினுக்குள் செலுத்தினார். ஆனால் மூன்று முறைக்கு மேல் தவறான பின் நம்பரை அவர் உபயோகித்ததால் ஏடிஎம் மிஷின் அவரது கார்டை உள்ளிழுத்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் ஏடிஎம் சென்டரில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் திணறியுள்ளார். பின்னர் கதவின் கீழுள்ள ஒரு சிறிய இடைவெளி வழியாக வெளியே சென்றுவிட முயற்சித்துள்ளார். பாதி உடம்பு வெளியே சென்றதும் அவரால் முன்னுக்கும் செல்ல முடியாமல், பின்னாலும் வரமுடியாமல் அதில் சிக்கிக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விட்டார். பின்னர் அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக தீயணைப்புதுறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். மீட்புப்படையினர் விரைந்து வந்து கதவை உடைத்து இளைஞரை மீட்டனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: , ,

Leave a Reply