பாலாவும் பூஜாவும் முத்தமிட்டது எதற்காக?

bala-pooja--kissநேற்று வெளியான இயக்குனர் பாலா மற்றும் நடிகை பூஜா முத்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த புகைப்படத்தால் இயக்குனர் பலாவின் இமேஜ் பெரிதும் சரிந்துவிட்டது. தற்பொழுது, பாலாவும் பூஜாவும் எதற்காக முத்தமிட்டுக்கொண்டனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிஹைண்ட்வுட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், பூஜாவிற்கு விடியும் முன் படத்தில் நடித்ததற்காக விருது கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலாவும் கலந்துகொண்டார். அப்போது, இருவரும் சந்தித்துக்கொண்ட போது தான் இந்த முத்தக்காட்சி நடைபெற்றுள்ளது. பொதுவாக பூஜா யாரை பார்த்தாலும் கட்டியணைத்து தான் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பார். ஆடியோ விழாவின் போது பூஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினால் போதும், உடனே அவர்களை கட்டிதழுவி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, இன்ப அதிர்ச்சியளிப்பார். யாரோ ஒருவரையே அண்ணன் தம்பியாக நினைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது, பாலாவை மட்டும் சும்மாவா விடுவார்.

ஆனால் இதில் என்ன விசேஷம் என்றால், பூஜாவின் முத்தத்திற்கு பாலாவும் பதில் முத்தம் தந்துள்ளார். அது தான், இவர்களுக்குள் என்ன உறவு? என கேள்வியை எழுப்பியுள்ளது. இருவரும் அண்ணன் தங்கை என ஒரு தரப்பு கூறியுள்ளது. மற்றோரு தரப்பு, சினிமாவின் இயக்குனருக்கும் நடிகைக்கும் இடையே இருக்கும் தொடர்புகளை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? எனக் கூறியுள்ளனர். எது என்னவோ இந்த முதகாட்சிக்களை வைத்து மீடியாக்கள் நல்ல பப்ளிசிடியை தேடிக்கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply