படகில் வருவோருக்கு ஒருபோதும் புகலிடம் கிடையாது – அவுஸ்ரேலிய அமைச்சர்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இன்னமும் கடுமையான கொள்கையையே அவுஸ்ரேலியா பின்பற்றுகிறது என்றும், படகு மூலம் அவுஸ்ரேலியா செல்பவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

அவுஸ்ரேலியாவில் அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பின்னர், ஆட்கடத்தல்களுக்கு எதிரான கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் டட்டன்

சிறிலங்கா வந்திருந்த அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டர், நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், சிறிலங்காவைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவை அவுஸ்ரேலியா வழங்கும் என்றும், பீற்றர் ட்டடன் தெரிவித்தார்.

சட்டவிரோத மாக படகுகளில் அகதிகள் அவுஸ்ரேலியா செல்வதை தடுப்பது குறித்தும் அவர் சிறிலங்கா பிரதமருடன் பேச்சு நடத்தியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!