மகிந்த ராஜபக்ச இஷ்டம் போல் செலவு.. : அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடு.

mahindanew_CIஅமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது செலவுகளைச் சிக்கனப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுற்றறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக ஜனாதிபதியின் நாளாந்த செலவுகள் மற்றும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்நிலையில் இதனை திசை திருப்பும் நோக்கில் தற்போது அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

“அரச நிதியை சிக்கனப்படுத்தலும், முகாமைத்துவப்படுத்தலும்” என்ற தலைப்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அழைத்துச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செலவு ஊதாரித்தனமாக இருப்பதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுங்கட்சிக்குள் சலசலப்புகள் தோன்றியுள்ளன.

Tags: , ,

Leave a Reply