ஏகாதிபத்தியவாதிகளின் சப்பாத்துக்களை நாவினால் சுத்தம் செய்யும் சிந்தனைகளை கொண்ட , வெளிநாட்டு டொலர்களை சட்டை பைகளில் போட்டுக்கொள்ளும் தரப்பினரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை வேண்டாம் எனக் கூறுவதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தி, மக்களை கொலை செய்து பாரிய அழிவுகளை ஏற்படுத்தி புலிகளின் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேண்டாம் என்றால், அதனை விட சிறந்த முறை உள்ளதா?. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் தவறு ஏற்பட்டால், அதனை சுட்டிக்காட்டாது, அதனை நீக்க வேண்டும் எனக் கூறுபவர்கள் சப்பாத்துகளை நாவினால் சுத்தப்படுத்தும் சிந்தனைகளை கொண்ட தரப்பினராவர்.
சப்பாத்துக்களை நாவினால் சுத்தப்படும் தரப்பினர் அதே போன்ற தலைவரை தெரிவு செய்து கொள்வதற்காக ஜனாதிபதி முறைமையை வேண்டாம் என்று கூறுகின்றனர் எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
















