முகமாலை கண்ணிவெடிகள் மத்தியில் பிரித்தானியத் தூதுவர்..!

uk-amb-visit-muhaamalaiபிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கீன் நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியுடன் முகமாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கண்ணி அகற்றல் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இதன்போது, 2010 முதல் 2014ஆம் ஆண்டுகளுக்காக மாத்திரம் தமது நாடு நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைளுக்காக 3.5 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கியுள்ளதாக ஜோன் ரங்கீன் சுட்டிக்காட்டினார்.

மேலும் கண்ணிவெடிகளை அகற்ற அடுத்த 18 மாதங்களுக்காக 1.6 மில்லியன் பவுண்ஸ்களை பிரித்தானியா வழங்கவுள்ளதாகவும் ரங்கீன் தெரிவித்தார். ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமே பிரித்தானிய ஆதரவுடன் நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

Tags: , ,

Leave a Reply