அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளைஞன் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை தீயிட்டு எரித்து அதன் மீது சிறுநீர் கழித்து அவமதித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்த Eric Minerault, என்ற கருப்பு நிறத்தில் உடையணிந்த 22 வயது இளைஞன் ஒருவன் அங்குள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயம் முன்பு, பைபிளை தீயிட்டு எரித்ததோடு அதன் மீது சிறுநீர் கழிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அதிர்ச்சியுடன் பார்த்த சிலர் உடனடியாக காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த இளைஞனை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் தனக்கு சிறுவயது முதல் கிறிஸ்துவ மதத்தினர் மீது வெறுப்பு உண்டானதாகவும், அதனால் இவ்வாறு செய்ததாகவும் கூறினான். மேலும் அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவனை மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்ய உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த்தனர்.
















