இணையதளங்களில் உள்ள நிர்வாண படங்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை மார்பிங் செய்யப்பட்டவை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பலரின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை அது நான் இல்லை, அவை போலியான படங்கள் என்று கூறுவார்.
தற்போது தமன்னாவுக்கும் அந்த நிலை தான்.
இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட தமன்னாவின் நிர்வாண படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்து தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இணையதளங்களில் இருக்கும் என்னுடைய நிர்வாண படங்கள் போலியானவை. போட்டோவில் உள்ள என் தலையை மட்டும் எடுத்து யாரோ நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் உடலில் ஒட்டியுள்ளனர் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகார் தெரிவித்தால் பிரச்சனை ஆகும் என்பதால் நான் அமைதியாக உள்ளேன் என்றார் தமன்னா.
என் அமைதியை தவறாக கருதக்கூடாது. இப்படி மார்பிங் செய்பவர்களின் அக்கா, தங்கைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தமன்னா.
















