பழங்காலத்டில் புறாவின் மூலம் செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டிருந்த நிலை மாறி தற்போது அஞ்சலகம், தொலைபேசி, எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் ஆகியவற்றின் மூலம் ஒரு செய்தியை மற்றொருவருக்கு பரிமாறிக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் இதற்கு அடுத்த நிலையாக ஒருவர் மனதில் நினைக்கும் செய்தி ஒன்றை டெலிபதி மூலம் 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவருக்கு பரிமாற முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
EEG headsets என்ற சக்தி வாய்ந்த சாதனம் ஒன்றின் உதவியால் ஒருவர் மனதில் நினைக்கும் செய்திகள் மின் அலைகள் மூலம் பைனரியாக மாற்றப்பட்டு அனுப்பபடுகின்றன., இந்த செய்தி 5000 மைல்கள் தொலைவில் உள்ள மற்றொருவரின் மூளையில் சென்றடைந்து பின்னர் அந்த பைனரி செய்தி எழுத்து வடிவில் கம்ப்யூட்டர் உதவியால் மாற்றப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு சமீபத்தில் இந்த சாதனம் மூலம் செய்தி அனுப்பி சோதனை செய்து பார்க்கப்பட்டது. உலகின் முதல்முறையாக டெலிபதி மூலம் ஒரு மனிதன் செய்தி அனுப்பியது இதுதான் முதல்முறை.
தற்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலம் வீடியோ சாட்டிங்கில் பேசிக்கொள்வது போல மனித மூளையுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
















