இளம்பெண்ணுக்கு “எச்சில்” தண்டனை – மறுத்ததால் நிர்வாணமாக்கிக் கொலை!

murderமேற்கு வங்காளத்தில் கொடூரத்தின் உச்சகட்டமாக பெண் ஒருவரை எச்சிலை சுவைக்க சொல்லி அவர் மறுத்த காரணத்தினால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் ஜால்பைகுரி மாவட்டம் துப்குரியை சேர்ந்த விவசாயி ஒருவர் வாடகைக்கு எடுத்த பவர் டிரில்லர் இயந்திரத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அங்குள்ள கிராம பஞ்சாயத்து கூடி அவருக்கு தண்டனை வழங்கியது.

இதை தடுத்த அவரது 16 வயது மகளை எச்சிலை சுவைக்க கூறி அவமானப்படுத்தி உள்ளனர். இதற்கு அந்த பெண் மறுத்து உள்ளார். இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் நமிதா ராய் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பின் அந்த இளம்பெண் நிர்வாண நிலையில் ரயில்வே டிராக்கில் பிணமாக கிடந்து உள்ளார். இது குறித்து இளம் பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்து உள்ளனர். அதில் இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

13 பேரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் இதில் சம்பந்தபடவில்லை என அக்கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.

Tags: , ,

Leave a Reply