அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம்பெண் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து மோதிரம் ஒன்றை திருடி அதை வாயில் போட்டு விழுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு அதிரடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த Orem என்ற நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவதற்காக Christina Schlegel, 25, மற்றும் Bryan Ford, 30 ஆகிய இரண்டு இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் நகைகளை பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது Bryan Ford நகைக்கடைக்காரருக்கு தெரியாமல் ஒரு விலையுயர்ந்த மோதிரத்தை மறைத்து வைத்துக்கொண்டார். இதை கடையின் செக்யூரிட்டி சிசிடிவி கேமரா மூலம் பார்த்து, உடனடியாக கடை மேலாளரிடம் புகார் கூறினார்.
உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் பிடிக்க முயற்சித்த போது அவர்கள் மிக வேகமாக கடையை விட்டு வெளியேறி தப்பித்து ஓட முயற்சித்தனர். பின்னர் அவர்களை பின் தொடர்ந்து சென்ற நகைக்கடையின் செக்யூரிட்டி இருவரையும் பிடித்து வந்தார். காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்யப்பட்டது.
சிறிது நேரத்தில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண் காவல்துறை அதிகாரி துணையுடன் அவரை முழுவதும் பரிசோதனை செய்தபோது திருடப்பட்ட மோதிரம் எங்கு மறைத்து வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பின்னர் Bryan Ford மோதிரத்தை விழுங்கியிருக்கலாம் என சந்தேகப்பட்டு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. அதில் அவருடைய வயிற்றில் மோதிரம் இருப்பது தெரிய வந்ததால், உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவரை டாய்லட்டிற்கு அழைத்து சென்று மோதிரத்தை போலீஸார் வெளியே வரவழைத்தனர்.
















