தனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டரை கொண்டு வரும் இயக்குனருக்கு பணம் வாங்காமல் இலவசமாக நடித்து தர தயார் என நடிகை ஓவியா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு களவாணி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன் பின்னர் கலகலப்பு, மதயானை கூட்டம், மூடர் கூடம், புலிவால், யாமிருக்க பயமே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்,. தற்போது பாரதிராஜாவின் பெயர் வைக்கப்படாத திரைப்படம் ஒன்றிலும், சரத்குமாருடன் ‘சண்டமாருதம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வரும் ஓவியா, சமீபத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்.
எனக்கு மிகவும் பொருத்தமான, என்னை அசர வைக்கும் கேரக்டரை தரும் இயக்குனருக்கு நான் ஒரு நயா பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்து வர தயாராக இருக்கின்றேன். எனது உதவியாளர்களுக்கும், எனது மேக்கப்மேன்களுக்கும் மட்டும் தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்தால் போதுமானது என்று கூறியுள்ளார். நடிகை ஓவியாவின் இந்த அதிரடி அறிவிப்பால் கோலிவுட் பரபரப்பு அடைந்துள்ளது. ஓவியாவை அசத்தும் கேரக்டரை இயக்குனர்கள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
















