பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் புதிய பேஷ் மேக்கர் கருவி

face-makerபேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் புதிய பேஷ் மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

இருதய துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு ‘பேஷ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுகிறது. பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவியை ஆபரேசன் மூலம் இருதயத்துக்குள் பொருத்துகின்றனர்.

‘பேஷ் மேக்கர்’ கருவியில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பேட்டரி மாற்ற வேண்டியது இருந்தாலோ ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து சரி செய்து பொருத்த வேண்டியுள்ளது. இதனால் உடல் நலத்தில் ஆபத்தும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

அதை தடுக்க தற்போது புதுவித பேஷ் மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இது பேட்டரி இன்றி ஆட்டோ மேடிக். அதாவது தானாக இயங்க கூடியது.

தானியங்கி (ஆட்டோமேட்டிக்) கை கடிகாரம் தொழில் நுட்பத்தை முன்னோடியாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply