சர்வதேச போட்டித்தன்மை தரப்பட்டியலில் இலங்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த வருடத்தைவிட இந்த தரப்பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஜெனீவாவை தளமாகக்கொண்ட உலக பொருளாதார மையம் நேற்று 2014 – 2015 ம் ஆண்டுக்கான சர்வதேச போட்டித்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு 73வது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
144 நாடுகளின் பட்டியலில் இலங்கை 4.2 என்ற புள்ளியின் அடிப்படையில் சரிவைக்கண்டுள்ளது.
கடந்த வருடத்தில் இலங்கை இந்த தரப்பட்டியலில் 65வது இடத்தை பெற்றிருந்தது.
நிறுவனங்கள், அடித்தள வசதிகள், சிறியரக பொருளாதாரம், சுற்றாடல், சுகாதாரம், ஆரம்பக்கல்வி, உயர்கல்வி, பயிற்சிகள், சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம் உட்பட்ட 12 விடயங்கள் இந்த தரப்படுத்தலுக்காக பார்க்கப்படுகின்றன.
இந்தியா 71வது இடத்தை பெற்றுள்ளது.
நேபாளம் 102ம் இடத்தையும், பங்களாதேஸ் 109வது இடத்தையும், பாகிஸ்தான் 129வது இடத்தையும் பெற்றுள்ளன.
சுவிட்ஸர்லாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியன இரண்டாம் இடத்தையும், பின்லாந்து 4ம் இடத்தையும் ஜெர்மனி 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.
















