துபாயில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூ.50க்கு சில்லரை கேட்டு வந்த மர்ம மனிதன் ஒருவர் ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் Hotel Intercontinental on Marine Drive என்ற ஓட்டலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி மர்ம மனிதன் ஒருவன் வந்து ரிஷப்னில் இருப்பவரிடம் ரூ.50க்கு சில்லரை கேட்டுள்ளார். அவரிடம் இருந்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் ரூ.1000 நோட்டு ஒன்றை கேட்டு சில்லரை கேட்டுள்ளார். அதற்கு இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை பெற்றவுடன் அதில் உள்ள ஒரு ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். ஐநூறு ரூபாய்க்கு அவரிடம் சில்லரை இல்லாததால், ஓட்டலில் உள்ள அக்கவுண்ட் ஆபீசரிடம் சென்று வாங்கிக்கொள்ளுமாறு ரிஷப்சனில் இருந்தவர் அவரை கேட்டுக்கொண்டார்.
பின்னர் நேராக அக்கவுண்ட் ஆபீசரிடம் சென்ற அந்த மர்ம மனிதன் தனக்கு ‘ஐ சீரியலில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு வேண்டும் என்று கூறியுள்ளார். அக்கவுண்ட் ஆபீஸர் மும்முரமாக ஐ சீரியல் நோட்டுக்களை தேடிக்கொண்டு இருக்கும்போது நைசாக பணம் இருக்கும் டிராயரை திறந்து ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்துவிட்டு மாயமாய் அந்த மர்ம மனிதர் சென்றுவிட்டார். இதுகுறித்து துபாய் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவியில் பதிவான உருவத்தை வைத்து மர்ம மனிதனை தேடும் முயற்சியில் துபாய் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அந்த மர்ம மனிதன் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















