தமிழ் பெண்ணை சைட் அடித்துக்கொண்டு சென்ற சிங்கள சிப்பாய் வானுடன் மோதி மரணம் !

lk-army2கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் புதன்கிழமை(3) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர், பலியாகியுள்ளதாக கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியில் வீதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வானொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிசார் கூறுகிறார்கள். விபத்தில், குருநாகலை சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார் (வயது 32) என்ற இராணுவ சிப்பாய், பலியாகியுள்ளார். இவர், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகப் பொலிஸார் மேலும் கூறினார். ஆனால் வான் சாரதி , தனது வாகனத்தில் சிப்பாய் தான் வந்து மோதியதாக கூறியுள்ளார்.

மேலும் குறித்த சிப்பாய் வீதியில் சென்ற தமிழ் பெண்களை சைட் அடித்தபடி சென்றே விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.

இருப்பினும் சிங்களப் பொலிசார் இதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் வான் சாரதியை உடனடியாக கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டுசென்றுவிட்டதாக, மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply