சமீபத்தில் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று, பெரும் அதிர்சி தகவலை தந்துள்ளது. குறிப்பாக பிரித்தானியா போன்ற மேலைத்தேய நாடுகளில் உள்ள இளைஞர்கள், தமது 15 வயது முதலே உடலை கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒல்லியாக இருக்கவேண்டும் பெண்களை கவரும் விதத்தில், தமக்கு உடல்வாகு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தொப்பை இல்லாமல் சிக்ஸ் பேக் உள்ள உடல்வேண்டும் என்று எல்லாம் நினைப்பார்கள். இதனை பெண்களும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நாட்களுக்கு அல்ல என்பது தான் அதிர்சி தகவல். நல்ல கட்டளகான உடல் கொண்ட ஒரு பையனை எனக்கு பிடிக்கும். அவருடன் நான் சில நாட்கள் தான் வாழுவேன்.
அவரை வாழ்கை துணையாக ஒன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல பிரித்தானிய பெண்கள் கூறியுள்ளார்கள். அட சொல்லிவைத்தால் போல பெண்கள் இப்படி கூறுகிறார்களே ? ஏன் என்று சற்று ஆராய ஆரம்பித்துள்ளார்கள் இக் கணக்கெடுப்பை நடத்தியவர்கள். இதற்கு பெண்கள் கூறும் காரணம் ஒன்றுதான். இப்படி கட்டளகாக , தம்மை வைத்துக்கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கவே முனைவார்கள். அவர்கள் ஒரு தராதரத்தில் இருப்பார்கள். ஆனால் எங்களின் நிலையை எண்ணிப்பாருங்கள் ? ஆனல் எமது (பெண்கள்) உடல் எடை அதிகரிக்கும். ஒரு காலகட்டத்தில் நாம் எமது கட்டளகை இழக்க நேரிடும். அப்போது ஆண்கள் அதனை குத்திக்காட்டுவார்கள். எம்மை மீண்டும் இளைக்கச் சொல்வார்கள். எடையைக் குறைக்கச் சொல்வார்கள்.
அதனால் எமக்குள் பிரச்சனை தான் தோன்றும். எனவே ஆசைக்கு கட்டளகான ஒரு வாலிபருடன் சுற்றி திரிந்தாலும், மாப்பிள்ளை என்று வரும்போது ஓரளவு தொப்பை கொண்ட ஆணை திருமணம் முடித்தாலே போதும் என்கிறார்கள் பெண்கள். அப்ப தொப்பை உள்ள ஆண்கள் இனி ஏங்கத்தேவையில்லை போல இருக்கிறதே ?
















