பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியான சவுத் ஷீல்டில், 23 வயதாகும் வாலிபர் ஒருவர் தனது 18 வயதுக் காதலியின் மூக்கையும் உதட்டையும் வேண்டும் என்றே கடித்து அசிங்கப்படுத்தியுள்ளார். கடைகளுக்குச் சென்று, தட்டுகளை மற்றும் பொருட்கள் வைக்கும் தட்டுகளை அடித்துக்கொடுக்கும் இந்த வாலிபர், தான் வெளியில் செல்லும் வேளை தன் காதலி என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்துள்ளாராம்.
அதாவது தான் வெளியே சென்றால் தன் அழகான காதலி தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஆண்களோடு சுற்றி திரிவதாக இவர் சந்தேகப்பட்டு உள்ளார். பல முறை இதுதொடர்பாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்னர் இவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அழகாக இருப்பதால் தானே நான் இப்படி ஒருவர் நாளும் தவிக்கவேண்டி உள்ளது. இவள் அழகை கெடுத்துவிட்டால் இவளால் எங்கேயும் செல்லமுடியாதே என்று யோசித்து உள்ளார். அதன்படி அவர் முத்தமிடுவது போல முயன்று, தனது காதலியின் உதட்டையும் மூக்கையும் பலமாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் தான் ஏன் அப்படிச் செய்தேன் என்று கூறியும் உள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே காதலி பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நடந்த கொடுமையை விபரித்துவிட்டார். விடுவார்களா பிரித்தானியப் பொலிசார் ? உடனே அன் நபரைக் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். பிணையில் அவர் தற்போது வெளியே வந்துள்ளார். ஆனால் அவர் மேல் போடப்பட்ட வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தேகிகள் தமது வாழ்கையை எவ்வாறு அழித்துக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா ?
















