பாதுகாப்பு படை பயிலுனர் விடுதி அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள் போர்க்கொடி

parliamentபாதுகாப்புப் படை பயிலுனர் விடுதி அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்பு படைப் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கான விடுதி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும்ää பயிலுனர்கள் தங்குவதற்கு விடுதி அமைப்பதற்காக பாரியளவில் பணம் செலவிடப்படுவதனை அமைச்சர்கள் சிலர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொம்பனித்தெருவில் இயங்கி வரும் பாதுகாப்புப் படைப் பயிற்சி மையமொன்றின் மாணவர்கள் தங்குவதற்காக 600 மில்லியன் ரூபா செலவில் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளினால் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் சில கஸ்டப் பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில பாடசாலைகளில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவப் பாடசாலைகள், இராணுவப் பல்கலைக்கழகங்கள் அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரிக்கக் கூடுமெனவும் இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதனால் 600 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியதில்லை எனவும், 448 மில்லியன் ரூபாவில் நிர்மானப் பணிகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இராணுவப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விடுதியமைக்க பாரியளவில் பணம் செலவிட வேண்டியதில்லை என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன

Tags: , ,

Leave a Reply