நாட்டில் நிர்வாக விடயங்கள் சீர்குலைந்து எந்தநேரத்தில் எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் நிலவிய காலத்தில் ஜனாதிபதியே மகிந்த ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்று குண்டு வெடிப்புகளை நிறுத்திய மந்திரவாதி போல் செயல்பட்டார் என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதே ஜனாதிபதியின் நோக்கமாக அமைந்துள்ளது.
2005ம் ஆண்டில் ஜனாதிபதி மகிந்த ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்காவிட்டால் நாடு இரண்டாகியிருக்கும். இன்று உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் நோக்கிலேயே நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிழையான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
















