தாயாரின் மருத்துவ செலவிற்காக பதக்கங்களை விற்ற முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை. அதிர்ச்சி தகவல்

disabled-athelete-sellsகடந்த 1990களில் பளுதூக்கும் வீராங்கனையாக திகழ்ந்து இந்தியாவிற்காக பல தங்க மெடல்களையும், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் பல விருதுகளையும் குவித்த வீராங்கனை ரூ.500 பணத்திற்காக தான் வாங்கிய மெடல்களை விற்பனை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பளுதூக்கும் வீராங்கனையாக திகழ்ந்த இந்திரா கெய்க்வாட் என்ற பெண், தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவர் தன்னுடைய தாயாரின் மருத்துவ செலவுக்கு ரூ.500 பணம் இல்லாததால் தான் பெற்ற பதக்கங்கள் ஒவ்வொன்றாக விற்றுவருவதாக கூறப்படுகிறது. கடந்த 17 வருடங்களாக மாநில அரசிடம் தான் அரசு வேலை கேட்டு கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அரசு தன்னுடைய கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் மிகவும் வருத்தத்துடன் கூறுகிறார் இந்திரா கெய்க்வாட்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்திரா கெய்க்வாட், தன்னுடைய தாயாருக்கு ஏற்பட்ட வாதநோய் காரணமாக மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத்தால் தான் சிறுவயதில் பெற்ற விலை மதிப்பில்லாத பதக்கங்களையும் கோப்பைகளையும் சொற்ப விலைக்கு விற்று தாயாரின் மருத்துவ செலவை கவனித்து வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் இவர் கடந்த 1997ஆம் ஆண்டு விஷ் சத்ரபதி என்ற உயரிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply