அதிக நேரம் செக்ஸ் உறவு புரிய மனைவி வற்புறுத்துவதால் தனக்கு விவாகரத்து தேவை என மும்பையை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை நீதிமன்றத்தில் ஒருவர் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் தன்னுடைய மனைவி தன்னை தினமும் பலமுறை உறவு கொள்ள வற்புறுத்துகிறார் என்றும், அதற்காக தனக்கு மது, மாத்திரை போன்றவற்றை கட்டாயப்படுத்தி கொடுத்து சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை உறவு கொள்ள அழைக்கின்றார் என்றும் கூறி தனக்கு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
தான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரங்களில் கூட தன்னை வற்புறுத்துவதாக கூறும் அந்த பரிதாப கணவனின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதி உடனடியாக அவருக்கு விவாகரத்து வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். மேலும் அந்த கணவன் தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதற்கிணங்கி நீதிபதி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையோ, அல்லது புகைப்படங்களையோ ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
















