சிம்புவும், நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன் காதலித்துக் கொண்டிருந்த போது இணையங்களில் சிம்புவும், நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தம் பதித்துக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. அவை படத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல, நிஜப் புகைப்படங்கள்தான் என்பது அப்போது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பின் இணையங்களில் சிம்புவும், பிரபல நடிகரின் மகள் ஒருவருடன் சிம்பு தொலைபேசியில் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ அதிகமாகப் பரவி ஒரு பரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட விஷயங்களை சிம்புதான் வேண்டுமென்றே ‘லீக்’ செய்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இதனிடையே கடந்த சில தினங்களாக சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி ஒரு பரபப்பை ஏற்படுத்தியுள்ளன. அது நிஜமான புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியாமலே இருந்தது.
அதன் பின் விசாரித்த போது, அந்தப் புகைப்படம் சிம்பு நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியின் புகைப்படம் என்ற தகவல் கிடைத்தது. இருந்தாலும் அப்படிப்பட்ட புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக யாரும் வெளியிட வாய்ப்பேயில்லை. இருந்தாலும் படத்தை சிம்புவின் அப்பாவே தயாரிப்பதால், நயன்தாராவின் கவர்ச்சியை வைத்து லாபத்தை அள்ளவேண்டும் என்று தற்பொழுது, படத்திற்காக எடுக்கப்பட்ட படுக்கையறை காட்சிக்களை இணையத்தில் கசிய விட்டு பப்ளிசிடி தேடியுள்ளார் டி.ஆர்.
தங்கச்சி சென்டிமென்ட் வொர்க்அவுட் ஆகலைன்னு ட்ராக்க மாத்தீட்டாரு போல…!
















