மணிக்கு 240 மைல்கள் வேகத்தில் ஓடும் உலகின் மிக அதிவேக மோட்டார் சைக்கிள். சுவீடன் பெண் சாதனை.

fastest-motor-cycle-world-recordசுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு உலகிலேயே மிக வேகமான மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தான் வடிவமைத்த மோட்டர் சைக்கிளில் மணிக்கு சுமார் 250 மைல்கள் வேகத்தில் சென்று சாதனை படைத்தூள்ளார்.

சுவீடன் நாட்டை சேர்ந்த Eva Håkansson என்ற பெண் அவராகவே புதுவித மோட்டார் சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். எலக்ட்ரிக் சார்ஜ் செய்தால் ஓடும் வகையிலான டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 241.901 மைல்கள் ஓடி சாதனை புரிந்துள்ளது. சராசரியாக 240.726 மைல்கள் ஒரு மணிநேரத்தில் ஓடும் திறன் உடையது என்று நிரூபிக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளுக்கு உலகிலேயே மிகவேகமாக ஓடும் மோட்டார் சைக்கிள் என்ற கின்னஸ் சாதனை பெருமையும் வழங்கப்படுள்ளது.

University of Denver என்ற பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்த Eva Håkansson, பி.எச்.டி முடித்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தான் சிறுவயதில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தனக்கு மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாகவும், அந்த கனவு தற்போதுதான் நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 33 வயதான Eva Håkansson தற்போது National Oceanic and Atmospheric Administration NOAA என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Tags: , ,

Leave a Reply