ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியானதா? ஆராயப்பட உள்ளது

Mahinda10ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியானதா என்பது குறித்து ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளது.

முன்னாள் பிரதம நீதயரசர் சரத் என் சில்வா கடந்த வாரம் ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியாது என கருத்துவெளியிட்டுள்ளதை தொடர்ந்தே நிபுணர் குழுவொன்றை இது பற்றி ஆரயாய்வதற்காக நியமிக்க எண்ணியதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது என்றால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசமைப்பில் இன்னொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும், மக்கள் ஜனாதிபதிக்கு இரண்டு தடவைக்கான ஆணையையே வழங்கியுள்ளதால் அவர் சர்வஜனவாக்கெடுப்பை கூட நடத்த வேண்டிய நிலை வரலாம் இது மிகவும் குழப்பகரமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply