ஐ.நா விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் விடயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நிலைமையை மதிப்பிட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அரச ஊடக பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிலமையை மதிப்பிட்ட பின்னரே நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும், நாங்கள் ஊகங்களின அடிப்படையில் செயற்படமுடியாது, சாட்சியமளித்தவர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து உரிய நேரத்தில் ஆராய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலமையை பொறுத்து சாட்சியமளிப்பதை தடுப்பதற்கான நடைமுறையொன்று ஏற்படுத்தப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















