மனுஸ்தீவு தடுப்பு முகாம் மிகவும் மோசமான கிருமிகள் தொற்றக் கூடிய முகாம் என அங்கு கடமை புரிந்த அதிகாரி ஒருவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹமீட்டின் மரணம் பற்றி மனுஸ்தீவு தடுப்பு முகாமில் கடமையாற்றிய அதிகாரி அவுஸ்ரேலியா செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது, இந்த முகாமிற்குள்ளே நிலவும் மோசமான சுகாதார நிலைமை பற்றி தெரிந்தவருக்கு ஹமீட்டின் மரணம் வியப்பைத் தரமாட்டாது.
இந்த முகாமில் வாயு சீராக்கிகள் இல்லை, கட்டில்கள் நெருக்கமாக போடப்பட்டிருந்தன. வாழ்வதற்குரிய நிலைமை மோசமானதாகவே இருந்தன, அகதிகள் வாழ்வதற்கான போதிய வசதி காணப்படவில்லை அவுஸ்ரேலிய சிறைகளை விட மிக மோசமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். இங்கு உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பாவிக்கும் இடங்கள் அனைத்தும் உடைந்து விழும் அபாயத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மோசமான நிலைமையை தாம் ரகசிய கமராவில் பதிவு செய்திருந்ததாகவும் இதன் காரணமாகவே தான் தனது பதவியையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
















