பாகிஸ்தானில் ஹபீஸ் சயீதை தான் சந்தித்தற்கு கண்டனம் தெரிவித்த எம்.பி.க்களின் முகத்தில் காரித் துப்ப வேண்டும் போல் உள்ளது என்று வேத் பிரதாப் வைதிக் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர் வேத் பிரதாப் வைதிக் கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சயீதை பாகிஸ்தானுக்கு சென்று சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி அவர் கூறுகையில், என்னை தேசத் துரோகி என்று அறிவிக்க எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தால் 545 எம்.பி.க்கள் முகத்திலும் காரித் துப்புவேன். என்னை சிறைக்கு அனுப்ப அரசு நினைத்தால் திஹார் சிறையில் எனக்கு பக்கத்து அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அடைக்க வேண்டும். மேலும், அவர் கார்கிலில் நூற்றுக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரபை சந்தித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
















