ஆன்லைனில் 81 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு முத்தத்தை ஏலத்தில் விற்ற மாடல் அழகி!

kissஅமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி எலிசபெத் ஹர்லி (49). எல்டன் ஜான்ஸ் எய்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் நிதிதிரட்டி வருகிறது.

அதற்கு உதவ மாடல் அழகி எலிசபெத் ஹர்லி முனவந்தார். அதற்கு அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அதாவது தனது முத்தத்தை ஏலத்தில் விலைக்கு விற்பதாகவும் அதை வாங்குபவருடன் விருந்து சாப்பிடுவதாகவும் அறிவித்தார்.

அவரது முத்த ஏலம் ஆன்லைனில் நடந்தது. அப்போது எலிசபெத் ஹர்லியின் முத்தம் 81 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது ரூ.49 லட்சத்துக்கு விலை போனது.

அதை இந்திய– கனடா வம்சாவளி நிதி நிறுவன அதிபர் ஜூலியன் பார்தி விலைக்கு வாங்கினார். 27 வயதான அவர் போர்ப்ஸ் பத்திரிகை அதிபர் ஸ்டான் பார்தியின் மகன் ஆவார்.

இவருக்கு மாடல் அழகி எலிசபெத் ஹர்லி அனைவரது மத்தியில் முத்தமிட்டார். விருந்தும் அமர்க்கலமாக நடந்தது.

Tags: , ,

Leave a Reply