அக்காசியை மிரட்டிய மகிந்தர்! உடன் விரைகிறார் ஜப்பானிய பிரதமர்

Akase-mahindaஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபேயின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காசியை அலரி மாளிகையில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஜப்பானிய பிரதமர் ஒருவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து ஜனாதிபதிக்கும் அக்காசிக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஜனாதிபதி, அக்காசிக்கு விளக்கம் அளித்துள்ளார். இதேவேளை, நிலக்கண்ணி வெடி அகழ்வு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அக்காசி தெரிவித்துடன் வழமை போன்று அக்காசியின் பயணங்கள் சிலவற்றிற்கு தடை விதித்ததுடன் வடக்கு விஜயத்திற்கும் முட்டுக் கட்டையாக இருந்ததுடன் பலவித அழுத்தங்களையும் கொடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கதாக இருந்தாலும் இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்று வந்த நிலையில் அவரின் சில முக்கிய செய்திகளும் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு விசேட விமானம் மூலம் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் அவரது பாரியார் அக்கி அபே இன்று மதியம் ஒரு மணியளவில் இலங்கை வந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜப்பானியப் பிரதமரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

பின்னர் அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷவும் வரவேற்று அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவர். இந்தச் சந்திப்பு முடிடைவடைந்த பின்னர் ஜப்பானியப் பிரதமர் தமது பாரியாருடன் நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார். இதன் பின்னர் இன்றிரவு சினமன் ஹோட்டலில் இடம்பெறும் விசேட வர்த்தக கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது பல வர்த்தக ஒப்பந்தங்களிலும் அவர் கைச்சாத்திடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஜப்பான் பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்தன. ஜப்பானியப் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply