பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் – சித்தார்த்.
நடிக்க வருவதற்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்த சித்தார்த் அவரை திருமணம் செய்து கொண்டார்.
சில வருடங்களில் மண வாழ்க்கை கசந்து விவாகரத்தில் முடிந்தது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த சித்தார்த்தை, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்று தெரிந்தும் பல நடிகைகள் சித்தார்த்தை காதலித்தனர்.
அவர்களில் ஸ்ருதிஹாசன் உட்பட சில நடிகைகளை சித்தார்த்தும் காதலிக்க…
பல நடிகைகளின் பெயர்கள் சித்தார்த் உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டன.
நாளடைவில் அந்த கிசுகிசுக்கள் காலாவதியாகிவிட, கடந்த சில வருடங்களாக சமந்தா உடன் இணைத்து பேசப்பட்டார் சித்தார்த்.
ஆரம்பத்தில் டென்ஷனான சித்தார்த்தும் பிறகு அமைதியாகிவிட்டார்.
அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் அந்த கிசுகிசுக்களை உண்மை என்று ஒப்புக்கொண்டதோடு, இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாய், சித்தார்த் – சமந்தா இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், சித்தார்த் – சமந்தா காதல்கதையில் திடீர் திருப்பமாக கடந்த சில மாதங்களாக திரையுலகில் ஒரு செய்தி பரவியது.
கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையில் பிரச்சனை என்றும் அதனால் பிரிந்துவிட்டார்கள் என்பதே அந்த செய்தி.
இந்த செய்திக்கு நம்பகத்தன்மை சேர்க்கும்விதமாக, அஞ்சான் படத்தில் சமந்தா நீச்சல் உடை அணிந்து படு கவர்ச்சியாக நடித்தை சுட்டிக்காட்டினார்கள்.
சித்தார்த் உடனான காதல் முறிந்துவிட்டதால்தான் படு கவர்ச்சியாக நடித்து காசு பார்ப்பதில் தீவரமாக இறங்கிவிட்டார் சமந்தா என்றெல்லாம் சொல்லப்பட்டநிலையில்….
இந்த கிசுகிசுக்களை எல்லாம் காலி பண்ணிவிட்டனர் சித்தார்த்தும் சமந்தாவும்…
சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தின் இசைவெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஐதராபாத்திலிருந்து பிளைட் பிடித்து கிளம்பி வந்தார் சமந்தா.
காதலரின் பட விழாவை கண்டுகளித்துவிட்டு திரும்பிச் சென்றார்…
















